விளையாட்டு விழா

பாரதி வித்யாலயா CBSE 4-ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் 21-ஆம் ஆண்டு மெட்ரிக் விளையாட்டு விழா சனிக்கிழமை பள்ளி வளாகத்தின் நடைபெற்றது.இவ்விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளர் திரு P.R வேலுமணி அவர்கள் தலைமையேற்று விழாவினை தொடங்கி வைத்தார். மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பல விளையாட்டுகளில் பங்கேற்று தங்கள் திறமைகளையும், விளையாட்டின் நுணுக்கங்களையும் வெளிக் காட்டினார்கள். மேலும் மாணவர்களின் தனி நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. மாணவர்கள் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளர் திரு P.R வேலுமணி அவர்கள் வழங்கி விழாவினை சிறப்பித்தார்.